மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம்  ஊராட்சியில்  தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு. 

 

பொன்னேரி 

 

கொரோனா வைரஸ்   பரவும் அபாயம் இருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருக்குமாறு அறிவுறுத்தல். கைகழுவுதல் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கல்.

கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வானங்களில் வந்து செல்கின்றனர். மேலும் இளைஞர்களும் வெளியே சுற்றித்திரிகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம்  மீஞ்சூர் ஒன்றியம்  தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு  தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் 144தடை உத்தரவை மதித்து வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்து கொரோனா நோயை ஒழிக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வீதி வீதியாக சென்று தண்டோரா அடித்து ஊழியர்கள் பொதுமக்களை அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் கைகழுவுதலின் அவசியம், கொரோனா தற்காப்பு முறைகள் குறித்து ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் சுகாதாரத்தை பேணிக்காக்க  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க பட்டது.

" alt="" aria-hidden="true" />