" alt="" aria-hidden="true" />
முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் டெல்லி தேசியத் தலைநகரப் பகுதிகளில் காற்று மாசு அடியோடு குறைந்துள்ளது.
டெல்லி, குருகிராம், பரீதாபாத், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளின் காற்று மாசுபாட்டை அறிவியல் மற்றும் சூழலியல் மையம் அளவிட்டுக் கண்காணித்து வருகிறது.
இயல்பான நாட்களில் காலையிலும் மாலையிலும் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் போது, காற்று மாசுபாடும் உச்சத்தைத் தொடும். கடந்த ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டபோது இந்த மாசுபாடு பெரிதும் குறைந்தது.
மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் வாகனப் புகையால் வருகின்ற நைட்ரஜன் டை ஆக்சைடு பெருமளவு குறைந்துள்ளது. மிக அரிதான நிகழ்வாகப் புகைமூட்டம் இல்லாமல் வானம் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது.