30 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர்பலி - பாதிக்கப்பட்டோர் அமெரிக்காவில் அதிகம்
March 28, 2020 • Muthu kumar • உலக செய்திகள்


" alt="" aria-hidden="true" />


சீனாவின் யூகான் நகரில் துவங்கிய கொரோனா பலி விரைவில் 30 ஆயிரம் என்ற இலக்கை அடைய உள்ளது.


இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 28.841 என்ற அளவில் உள்ளது.


அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கையும்,பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் சூழலில் , பலியானோர் எண்ணிக்கை நாளை 30 ஆயிரம் என்ற அளவில் இருக்கும் என்று அறியப்படுகிறது.


அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடித்தக்கது.