" alt="" aria-hidden="true" />
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட 33 ஆயிரத்து 06 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவசர தேவைக்களுக்காக அல்லாமல் அநாவசியாமாக வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி தற்போது வரை தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 897 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.விதிமீறல்களில் ஈடுபட்ட 23 ஆயிரத்து 691 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 33,006 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சுமார் 13 லட்சத்து 99 ஆயிரத்து 800 ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.